22 August 2024

வாகை மரத்தின் பயன்பாடுகள் மற்றும் வாகை பூ சிறப்பு

வாகை மரத்தில் இவ்வளவு நன்மைகளா?

  •        வாகை பூ என்பது பேபேசி குடும்பத்தைச் சேர்ந்த இருவித்திலை மரமாகும்.


  •  சங்ககாலத்தில் போரில் வெற்றிபெறும் வீரர்களுக்கு வாகை மலர் சூட்டப்பட்டு வெற்றிக் களிப்பை பகிர்ந்ததாக தமிழ் இலக்கியங்களில்குறிப்புகள் உள்ளன. "வெற்றி வாகைச் சூடினான்" எனும் தொடர் இன்னமும் வழக்கிலுள்ளது. 
  • வாகை என்பதை தூங்கமூஞ்சி மரத்துடன் தற்காலத்தில் தவறுதலாகப் பொருள் கொள்ளப்படுகிறது.


  • பாலை நிலத்தில் வளரும் முக்கிய மரம் வாகை மரமாகும், இதை உழிஞ்சில் என்றும் உன்ன மரம் என்றும், பாலை மரம் என்றும் கூறி வந்தனர். 
  • இதன் பூ பொன்னிறமாக இருக்கும். வெற்றி வாகை சூடினான் என்பார்களே, அந்த வாகை இதுதான். வாகைபூவைத் தொடுத்து, வெற்றிச் சின்னமாகக் கழுத்தில் அணிந்துக் கொள்வர். 
  • பெண்கள் காதணியாக அணிந்து கொள்வர் என்று சங்க நூல்கள் தெரிவிக்கின்றன.

வாகை மரத்தின் சிறப்புகள்:

  • வாகை மலர்ச்சூடுதல் வெற்றிக்களிப்பை உணர்த்தும்.
  • வீக்கம், கொப்புளம் வடிதலுக்கு மருந்தாகப் பயன்படுத்தப் படுகிறது.
  • இருமல், நுரையிரல் அழற்சி, ஈறழற்சி ஆகியவற்றிற்கு இவை மருந்தாகப் பயன்படுத்தப் பட்டுள்ளது. குறிப்பாக இம்மரப்பட்டையைஅழற்சிக்கு மருந்தாகப் பயன்படுத்துகின்றனர்.
  • இதன் இலை, பூ, பட்டை, பிசின், வேர், விதை ஆகியன மருத்துவப் பயனுடையவவாக கருதப்படுகின்றது.

வாகை மரத்தின் மருத்துவ பயன்பாடு:

கண் வியாதிகள் போக்கும் :

  • கண் வியாதிகள், கண்கள் சிவப்பது முதல் கண் எரிச்சல்,கண் அரிப்பு, நீர் வடிதல், பார்வை மங்குதல் மற்றும் மாலைக்கண் வியாதி இவற்றுக்கு வாகை இலைகளில் தயாராகும் தேநீர், சிறந்த தீர்வு.
  • கண் பார்வை திறன் அதிகரிக்க சிறிது வாகை இலைகளை நன்கு அலசி, அத்துடன் சிறிது சீரகம் சேர்த்து, இரண்டு தம்ளர் தண்ணீர் விட்டு, நன்கு காய்ச்சி, பாதியாகச் சுண்டியதும், பனங்கற்கண்டு சேர்த்து பருகிவர, கண்களின் பார்வைத்திறன் அதிகரிக்கும். இதனால், கண்கள் வலுப்பட்டு, மாலைக்கண் வியாதி, கண் சிவப்பது, நீர் வடிதல் உள்ளிட்ட கண் வியாதிகளின் பாதிப்புகள் அகலும்.

கண்களின் வலியைப்போக்கும் முறை:

  • சிறிதளவு விளக்கெண்ணையில், ஐந்தாறு வாகை இலைகளை வதக்கி வைத்துக்கொண்டு, ஆறியபின் அவற்றை, கண்களை நன்கு தண்ணீர் விட்டு அலசியபின், கண்களை மூடி, கண் இமைகளின் மேல், வதக்கிய வாகை இலைகளை வைத்துக் கட்டி, சிறிது நேரம் கழித்து, கட்டைப் பிரிக்க, கண் வலிகள், கண் வீக்கம், கண் எரிச்சல் உள்ளிட்டவை சரியாகிவிடும்.

  • வாகை மலர் மருந்து வாகை மரத்தின் நறுமணமிக்க மலர்களைக் கொண்டு, விஷக்கடிகளுக்கான மருந்தை தயாரிக்கலாம். 
  • சிறிதளவு வாகை மலர்கள் அல்லது மொட்டுக்கள் இவற்றுடன் சிறிது மிளகைப் பொடி செய்து, இரண்டு தம்ளர் தண்ணீர் விட்டு, சூடாக்கி, பாதி அளவு வந்ததும் ஆற வைத்து. தேனைக் கலந்து பருகிவர, உடலில் கை கால்களில் ஏற்பட்ட குத்துவது போல இருந்த வலிகளெல்லாம் மாயமாகும்.

எப்படி வாகை மரத்தின் பூக்களைப் பயன்படுத்தி, விஷமுறிவுக்கான மருந்து தயாரிக்கலாம்?

தேவையான பொருட்கள்:

  • வாகை பூக்கள், மிளகு, தேன். (இரண்டு மூன்று பூக்கள், பூக்கள் கிடைக்கவில்லை என்றால் மொட்டுக்களை பயன்படுத்தலாம்.)

செய்முறை:

  • இதனுடன் சிறிது மிளகை பொடி செய்து, சேர்க்கவும். ஒரு டம்ளர் நீர்விட்டு, கொதிக்க வைக்கவும். வடிகட்டி எடுத்து தேன் சேர்த்து பருகிவர, கை, கால் வலிகள் சரியாகும். விஷம் முறியும். நாய், எலி, தேள், பாம்பு கடிக்கு மருந்தாகிறது.இரத்த ஓட்ட பாதிப்பினால் ஏற்படும், வாத வியாதிகளையும் போக்கும்.


வாகை குடிநீர்: 

  • மருத்துவத் தன்மைகள் நிரம்பியவாகை மரத்தின் விதைகளை பொடியாக்கி, தண்ணீரில் இட்டு காய்ச்சி பருகி வர, உடலில் தோன்றும் ஒவ்வாமை பாதிப்புகளுக்கு மருந்தாகும். 
  • சில நேரங்களில், உடலில் நெறிக்கட்டிகள் உண்டாக்கும் காய்ச்சலை குணமாக்கும், இரத்த ஓட்டத்தை சீராக்கி, இரத்த நாளங்களில் சேரும் கொழுப்புகளை குறைக்கிறது.

 

வாகை மரத்தின் விதைகள் வியாதி எதிர்ப்பு தன்மைகள் மிக்கது, வியாதிகளைப் போக்கி, வீக்கங்களையும் கரைக்கும் தன்மையுடையது. 

  • வாகை மரத்தின் விதைகள் சிறிது எடுத்துக்கொண்டு, மிளகுத்தூளுடன் கலந்து இரண்டு தம்ளர் தண்ணீர் விட்டு காய்ச்சி, ஒரு தம்ளராக நீர் சுண்டியபின், ஆற வைத்து, பனங்கற்கண்டு சேர்த்து பருகிவர, பாதிப்புகள் தரும் கழுத்து, இடுப்பு மற்றும் தொடைப்பகுதிகளில் வலியைத் தந்துவந்த நெறிகட்டிகள் மறைந்துவிடும்.

வாகை மரப்பட்டைகளின் பயன்கள் :

  •  வாகை மரத்தின் பட்டைகளை நிழலில் உலர்த்தி, தூளாக்கி வைத்துக்கொண்டு, பாலில் கலந்து பருகிவர, பசியின்மை பாதிப்புகள் விலகி, நன்கு பசி எடுக்கும். உடல் சூட்டினால், உணவை சாப்பிட முடியாத நிலையை உண்டாக்கும் வாய்ப்புண்களை, ஆற்றும் தன்மைமிக்கது.

மூல வியாதிகள் : 

  • உலர்த்தி தூளாக்கிய வாகை மரத்தின் பட்டைகளை சிறிது எடுத்து, அதை வெண்ணை அல்லது நெய்யில் குழைத்து சாப்பிட்டு வர, துன்பங்கள் தந்து வந்த, மூல வியாதிகளின் பாதிப்புகள் விலகும்.

வயிற்றுப் போக்கு : 

  • சிலருக்கு உண்ட உணவின் ஒவ்வாமை காரணமாக, இடைவிடாத வயிற்றுப்போக்கு உண்டாகும், அந்த பாதிப்பை சரிசெய்ய, வாகை மரப்பட்டைத் தூளை, மோரில் கலந்து பருகி வர, வயிற்றுப்போக்கு விலகி விடும்.

கால் நடைகளுக்கு மருந்தாக :

  •  காயங்கள், புண்கள் மீது, வாகை மரப்பட்டைத் தூளை, எண்ணைவிட்டு குழைத்துத் தடவிவர, காயங்கள் சீக்கிரம் ஆறி விடும்.

                    Thank you to all






No comments:

Post a Comment

The Power of Pineapple: Unlocking its Health Benefits : Pineapple is a tropical fruit that is not only delicious but also packed with nutrie...